உலகம்

இந்தியா தவிர யாருமே எங்களுக்கு உதவவில்லை: இலங்கை பிரதமர் ரணில்

Published

on

இந்தியா தவிர யாருமே எங்களுக்கு உதவவில்லை என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இலங்கை கடும் பொருளாதாரத் தட்டுப்பாடு சிக்கி வருகிறது. இதன் காரணமாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

இதனை அடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அரசு செலவினங்களை குறைத்தார். இருப்பினும் இலங்கை இப்போதைக்கு மீள முடியாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா பல கோடி கடன்களை இலங்கைக்கு அளித்து அத்தியாவசிய பொருட்களையும் கப்பல் மூலம் அனுப்பி வைத்து இலங்கை கைகொடுத்து வருகிறது. தமிழகத்திலிருந்தும் ஒரு கப்பல் நிறைய அத்தியாவசிய பொருட்கள் மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சர்வதேச நிதி ஆணையத்திடம் இலங்கை கடன் உதவி கேட்டும் இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நிதியம் இதுவரை சரியான பதில் கூறவில்லை. எரிபொருள் வாங்குவதற்கு கூட எந்த நாடும் இலங்கைக்கு உதவி செய்யாத நிலையில் இந்தியா மட்டுமே பணம் வழங்குகிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version