வணிகம்

உலக வர்த்தக சிறப்பு உரிமைகளைப் பெற இந்திய வளரும் நாடு இல்லை: ட்ரம்ப்

Published

on

சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய உலக வர்த்தக அமைப்பு கீழ் வளரும் நாடுகளுக்கு ஒப்பந்தங்கள் போடப்படும். அந்த ஒப்பந்தங்களின் படி வளரும் நாடுகளுக்கு சர்வதேச அளவில் வர்த்தகம், வரி சலுகைகள் போன்றவை வழங்கப்படுகிறது.

இப்படி சர்வதேச வர்த்தகங்களைச் செய்து வரி விலக்குகளைப் பெறுவதற்கு இந்தியா வளரும் நாடு இல்லை. உலக வர்த்தக ஒப்பந்தத்தை இரண்டு நாடுகள் (இந்தியா, சீனா) தவறாகப் பயன்படுத்தி வருகின்றன. அதை இதற்கு மேலும் நான் அனுமதிக்கமாட்டேன்.

உலக வர்த்தக அமைப்பு எங்களுக்கு அழுத்தம் கொடுத்தால் அதிலிருந்து நாங்கள் வெளியேறவும் தயங்க மாட்டோம். இனிமேலும் அமெரிக்காவை உலக வர்த்தக அமைப்பைப் பயன்படுத்திச் சுரண்ட முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version