கிரிக்கெட்

மழையால் தடைபட்ட இந்தியா, நியூசிலாந்து அரையிறுதிப்போட்டி இன்று தொடர்கிறது!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அறையிறுதிப்போட்டியில் இந்திய அணி நேற்று நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. ஆனால் நேற்று மழையால் ஆட்டம் தடைபட்டதால் மீதியுள்ள ஆட்டம் இன்று நடைபெறும்.

மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்களால் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ரன் குவிக்க திணறினர். இதனால் நியூசிலாந்து அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்க ஆட்டக்காரர் மார்டின் குப்தில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்ததில் இருந்து அந்த அணி தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ராவின் பந்துவீச்சில் நேற்று அனல் பறந்தது. இதனால் அந்த அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. மழை விடும் மீண்டும் போட்டியை தொடரலாம் என காத்திருந்தும் மழை விடாததால் போட்டி இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் மீதியுள்ள ஓவர்கள் இன்று வீசப்படும். பொதுவாக போட்டியின்போது மழை குறுக்கிட்டு ஆட்டத்தில் தாமதமானால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். ஆனால், இந்த போட்டியில் இந்திய அணி இன்னும் பேட்டிங் செய்யவில்லை என்பதால் ரிசர்வ் டே முறைப்படி போட்டி இன்று தொடர்ந்து நடைபெறும் என நடுவர்கள் அறிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version