கிரிக்கெட்

இந்தியா, நியூஸி. அரையிறுதிப் போட்டி மழை குறுக்கீட்டால் தடை: நியூஸி. 211/5 (46.1)

Published

on

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதிப்போட்டி மழையால் தற்போது தடைபட்டுள்ளது. நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன் எடுத்த நிலையில் மழை பெய்தது.

மான்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷமிக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் கொண்டு வரப்பட்டுள்ளார். ஜடேஜா மற்றும் ரிஷப் பண்டுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்களால் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ரன் குவிக்க திணறினர்.

இதனால் நியூசிலாந்து அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மோசமான ஆட்டத்தில் இருந்து அவர்களால் மீள முடிந்தது. தொடக்க ஆட்டக்காரன் மார்டின் குப்தில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்ததில் இருந்து அந்த அணி தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ராவின் பந்துவீச்சில் இன்று அனல் பறந்தது. நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்போது தடைபட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு இது சற்று சிரமத்தை உருவாக்கும்.

Trending

Exit mobile version