விளையாட்டு

டெஸ்ட் தொடரை வென்றும் இந்தியாவுக்கு கைகூடாமல் போன 40 ஆண்டு சாதனை!

Published

on

ஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக இந்தியா வென்றதில்லை. முதன்முறையாக தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் இருந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய, ஆஸ்திரேலிய அணி 300 ரன்னில் ஆல் அவுட் ஆகி பாலோ-ஆன் முறையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இதனால் இன்னிங்ஸ் தோல்வியை தவிற்க ஆஸ்திரேலியா கடுமையான போராட்டத்தை முன்னெடுக்க இருந்தநிலையில் அந்த அணிக்கு மழை உதவி செய்தது.

மோசமான வானிலை காரணமாக ஆட்டம் பெரிதும் தடைபட்டு நான்காவது நாள், ஐந்தாவது நாள் ஆட்டம் இதனால் பாதிக்கப்பட இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பறிபோனது, ஆட்டம் சமனில் முடிவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரை 2-1 என்ற முறையில் கைப்பற்றி வரலாற்று சாதனையை பதிவு செய்தது. அதே நேரத்தில் இந்தியாவின் மற்றொரு சாதனை மழை காரணமாக கைகூடாமல் போனது.

நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் நடந்த சிட்னியில் கடைசியாக இந்திய அணி 1978-ம் ஆண்டில்தான் வென்றது. கடந்த 40 ஆண்டுகளாக சிட்னி மைதானத்தில் நடந்த எந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வென்றதில்லை. இந்தப் போட்டியில் மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால் இந்திய அணி வெற்றிபெற்றிருக்க அதிக வாய்ப்புகள் இருந்த நிலையில் 40 ஆண்டு சாதனை கைகூடாமல் போனது.

seithichurul

Trending

Exit mobile version