இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 2.87 லட்சம் நபர்களை கொரோனா பாதிக்கும்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

Published

on

கொரோனா வைரஸ் எதிரான தடுப்பூசி அல்லது மருந்துகளை விரைவில் கண்டறியவில்லை என்றால், 2021-ம் ஆண்டு குளிர்காலம் முடியும் போது இந்தியாவில் தினம் 2.87 லட்சம் நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைவார்கள் என அமெரிக்கத் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான மாசசூசெட்ஸ் ஆய்வு முடிவுகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட 84 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்விலிருந்து தரவுகள் கிடைத்துள்ளன.

2021 வசந்த காலத்தில் உலகம் முழுவதும், 24.9 கோடி நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். 17.5 லட்சம் நபர்கள் இறந்து இருப்பார்கள்.

அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 95,400 நபர்கள் வரை கொரோனா தொற்று பாதிக்கும். தென் ஆப்ரிக்காவில் 20,600, ஈரானில் 17,000, இந்தோனேசியாவில் 13,200, இங்கிலாந்தில் 4200, நைஜீரியாவில் 4000, துருக்கியில் 4000, பிரான்ஸில் 3,300, ஜெர்மனியில் 3000 நபர்கள் என கொரொனா தொற்றால் தினமும் பாதிக்க வாய்ப்புள்ளது.

எனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்கும் வரை, மக்கள் சமூக இடைவெளி போன்ற சுய கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றுவதுதான் பாதிப்பைக் குறைப்பதற்கான ஒரே வழி என்று கூறுகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version