இந்தியா

டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் நிரந்தர தடை?

Published

on

இந்திய அரசு ஜூன் மாதம் டிக் டாக் உட்பட 59 செயலிகளைத் தடை செய்து உத்தரவிட்டது தடை செய்தது மட்டுமல்லாமல் அனைத்து செயலிகளிடமும் விளக்கம் கேட்டு நோடீஸ் அனுப்பியது இந்திய அரசு.

அதற்கு பெரும்பாலான சீன செயலிகள் நிறுவனங்கள் விளக்கம் அளித்தன. ஆனால் சீன நிறுவனங்கள் அளித்த விவரங்கள் போதுமானதாக இல்லை என்று இந்திய அரசிடம் இருந்து சென்ற வாரம் வெளியான தகவல்கள் கூறுகின்றன.

ஐடி சட்டம் 2009-ன் பிரிவு 69A கீழ் டிக்டாக், ஹெலோ, வீசாட், ஷார் இட், அலிபாபா யூசி பிரவுசர், யூசி நியூஸ் என 59 சீன செயலிகளுக்கு முதலில் இந்திய அரசு தடை விதித்தது. இதனால் பல சீன செயலி நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது சேவையை நிறுத்தின. தொடர்ந்து பல்லாயிரம் கணக்கான ஊழியர்கள் வேலையை இழந்தனர். ஆனால் இவை எதுவுமே பெரிய அளவில் செய்திகளாக வெளியாகவில்லை.

மேலும் செப்டம்பர் 2-ம் தேதி இந்த தடை 118 செய்திகளாக அதிகரித்தது. நவம்பர் மாதம் 43 செயலிகள் மற்றும் ஷாப்பிங் தலமான அலி எக்பிரஸ் உள்ளிட்ட சேவைகளும் தடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தடை குறித்து முக்கிய விவரங்களை அறிந்த அதிகாரி ஒருவரிடம் விசாரித்த போது, 59 சீன செயலிகளை நிரந்தரமாக இந்திய அரசு தடை செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version