கிரிக்கெட்

4 விக்கெட்டுக்களை இழந்து திணறி வரும் இந்திய அணி: தனியாளாக போராடும் ரோஹித்!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நேற்று தொடங்கிய நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்து இருந்தது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த நிலையில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தத்தளித்து வருகிறது.

ரோஹித் சர்மா மட்டும் தனி நபராக போராடி இதுவரை 32 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விராத் கோலி ரன் ஏதும் எடுக்காமலும், புஜாரே, ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களிலும் அவுட் ஆனது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் பென்ஸ்டாக் மற்றும் லீச் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 175 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version