இந்தியா

உலகில் அதிக பெண் கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?

Published

on

உலகில் அதிக பெண் கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

உலகிலேயே பெண் கோடீஸ்வரர்கள் அதிகம் இருக்கும் நாடுகள் குறித்த பட்டியல் சமீபத்தில் எடுக்கப்பட்ட நிலையில் இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 9 பெண் கோடீஸ்வரர்கள் உள்ளனர் என்பது தகவல் வெளியாகியுள்ளன. இதில் சாவித்திரி திண்டல் 17.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார பெண்மணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்டி இன்டெக்ஸ் சமீபத்தில் எடுத்த ஆய்வின்படி, ஃபோர்ப்ஸின் நிகழ்நேர பில்லியனர் பட்டியல் மூலம் அதிக பெண் கோடீஸ்வரர்கள் வசிக்கும் நாட்டின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

1. அமெரிக்கா: 92 பெண் கோடீஸ்வரர்கள்

2. சீனா: 46 பெண் கோடீஸ்வரர்கள்

3. ஜெர்மனி: 32 பெண் கோடீஸ்வரர்கள்

4. இத்தாலி: 16 பெண் கோடீஸ்வரர்கள்

5. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங்: தலா 9 பெண் கோடீஸ்வரர்கள்

அமெரிக்கா ஏற்கனவே ஆண்கள் கோடீஸ்வரர் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் போன்ற கோடீஸ்வரர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணி, ஹாங்காங் டெக் மொகுல் Zhou Qunfei என்பவர் தான். இவர் $6.6 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்டுள்ளார், அதே நேரத்தில் Canva இணை நிறுவனர் Melanie Perkins என்பவரின் நிகர மதிப்பு $3.62 பில்லியன் ஆகும். இந்திய தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதியான 72 வயதான சாவித்ரி ஜிண்டால் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது $17.3 பில்லியன் சொத்துக்களைக் கொண்டுள்ளனர்.

இந்தியாவின் பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ள மற்ற பெண்களில் லீனா திவாரி, ஃபால்குனி நாயர், ஸ்மிதா கிருஷ்ணா-கோத்ரேஜ், அனு ஆகா மற்றும் கிரண் மஜும்தார்-ஷா ஆகியோர் அடங்குவர்.

seithichurul

Trending

Exit mobile version