இந்தியா

உலகின் பழமையான நாடுகளின் பட்டியல்.. இந்தியாவுக்கு எந்த இடம்?

Published

on

உலக மக்கள் தொகை மதிப்பாய்வு அமைப்பின்படி உலகில் உள்ள 10 பழமையான நாடுகள் எவை எவை? என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் என்பதை தற்போது பார்ப்போம்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை மற்றும் சில விபரங்களை கருத்தில் கொண்டு உலக மக்கள் தொகை மதிப்பாய்வு பழமையான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மிகவும் பழமையான நாடு என ஈரான் நாடு முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு ஏழாவது இடம் தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா கிமு 2000 ஆண்டு முதல் பழமையானது என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் இன்றைய தேதியில் இருந்து சுமார் 4000 ஆண்டுகள் மட்டுமே இந்தியா பழமையானது என்று இந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தின் கீழடியில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் கிடைத்துக் கொண்டிருப்பதை பார்க்கும்போது இந்த பட்டியலுக்கும் உண்மை நிலவரத்திற்கும் சம்பந்தம் உண்டா என்ற கேள்வி தற்போது எழுகிறது

இந்த நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தின் அடிப்படையில் உலக மக்கள் தொகை மதிப்பாய்வு உலகின் பழமையான பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் இதோ:

1. ஈரான் – 3200 B.C.E.
2. எகிப்து – 3100 கி.மு
3. வியட்நாம் – 2879 கி.மு
4. ஆர்மீனியா – 2492 கி.மு
5. வட கொரியா – 2333 கி.மு
6. சீனா – 2070 B.C.E.
7. இந்தியா – 2000 B.C.E.
8. ஜார்ஜியா – 1300 கி.மு
9. இஸ்ரேல் – 1300 கி.மு
10. சூடான் – 1070 கி.மு

இந்த நிலையில் சுய-இறையாண்மை தேதியின் அடிப்படையில், ஜப்பான் உலகின் மிகப் பழமையான நாடு என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இதோ:

1. ஜப்பான் – 660 B.C.E.
2. சீனா – 221 B.C.E.
3. சான் மரினோ – 301 CE
4. பிரான்ஸ் – 843 CE
5. ஆஸ்திரியா – 976 CE
6. டென்மார்க் – 10 ஆம் நூற்றாண்டில் கி.பி
7. ஹங்கேரி – 1001 CE
8. போர்ச்சுகல் – 1143 CE
9. மங்கோலியா – 1206 CE
10. தாய்லாந்து – 1238 CE

seithichurul

Trending

Exit mobile version