விளையாட்டு

ஒலிம்பிக் நிறைவு: 7 பதக்கங்களுடன் 48-வது இடத்தில் இந்தியா!

Published

on

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 7 பதக்கங்களுடன் இந்தியா 48-பவது இடத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நிறைவு செய்துள்ளது.

32-வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி ஜப்பானின் டோக்கியோ நகரில் தொடங்கியது. இரு வாரங்களாக களைகட்டிய ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நிறைவு அடைந்துள்ளது. 205 நாடுகள் பங்குபெற்ற இந்த ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது.

நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய அணியில் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார். 38 தங்கப் பதக்கங்கள் உட்பட 87 பதக்கங்கள் உடன் சீனா ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 36 தங்கங்கள் உட்பட 108 பதக்கங்கள் உடன் அமெரிக்கா 2-ம் இடத்தில் உள்ளது.

1 தங்கம் உட்பட 7 பதக்கங்கள் உடன் இந்திய அணி ஒலிம்பிக் போட்டிகளில் 48-வது இடத்தைப் பெற்று நிறைவு செய்துள்ளது. இன்றும் சில போட்டிகள் நடைபெற்று வருவதால் ரேக்கிங் பட்டியல் மாறுதலுக்கு உட்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version