கிரிக்கெட்

INDvAUS – 32 ஆண்டுகளுக்குப் பின் ஆஸி., மண்ணில் இந்தியா நிகழ்த்திய சாதனை; வெற்றி பெற்ற அந்த கணம்..! #Video

Published

on

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. தொடரின் கடைசி போட்டியில் த்ரில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது இந்தியா.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 328 ரன்கள் இலக்கை இந்திய அணி, போராடி அடைந்தது. டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸை பொறுத்தவரை இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில், புஜாரா மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் அரைசதம் அடித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

குறிப்பாக 5வதாக களமிறங்கிய ரிஷப் பன்ட், 138 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை விக்கெட் இழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கே இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் கொடுக்கப்பட்டது.

4வது டெஸ்ட் போட்டி நடந்த காபாவில், ஆஸ்திரேலிய அணி கடந்த 32 ஆண்டுகளாக வீழ்த்தப்பட்டதில்லை. அதை முறியடித்துள்ளது இந்திய அணி. மேலும் ஆஸ்திரேலிய மண்ணிலேயே அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்று கெத்து காட்டியுள்ளது.

என்னதான் இந்தியா, தொடரை வென்றிருந்தாலும், தொடர் முழுவதும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்.

அவர், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொத்தம் 21 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 20.04 என்கிற சராசரியில் அவர் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அனுபவமற்ற, முன்னணி வீரர்கள் பெரும்பான்மையானவர்கள் இல்லாத நிலையில், இந்தியா, வலுவான ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியுள்ளது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Trending

Exit mobile version