இந்தியா

புதிய வகை கொரோனா குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அறிவுறுத்தல்

Published

on

புதிய வகை கொரோனா குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது ஜனவரி 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் புதிய வகை கொரோனா குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கைப்பட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் குறைந்தாலும் மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தொடர் கண்காணிப்பு, கட்டுப்பாட்டுன் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பார்களுடன் கூடிய டாஸ்மாக் கடைகள் 50% இருக்கைகளுடன் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version