வணிகம்

இந்தியா 2025-ம் ஆண்டு 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுமா? அதிர்ச்சியான பதிலளித்த முன்னாள் ஆர்பிஐ கவர்னர்!

Published

on

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஒரு ஆண்டாகவே மிகப் பெரிய அளவில் சரிந்து வருகிறது. நடப்பு ஆண்டில் 7.2 சதவீத ஜிடிபி-ஐ இந்திய அரசு எட்டும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதை 5.8 சதவீதமாகப் பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் குறைத்துள்ளன.

இந்நிலையில் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் சி ரங்கராஜனிடம், இந்தியா 2025-ம் ஆண்டு 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுமா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதில் ரங்கராஜன் அது “simply out of question” (கேள்விக்கு இடமில்லை) என்று பதில் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒருவேலை இந்தியா 2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதாரத்தை எட்டிப்பிடித்தாலும், தனிநபர் வருவாய் சராசரி 18,00 டாலரிலிருந்து 36,000 டாலராக மட்டுமே உயரும்.

அப்படி உயர்ந்தாலும்,குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடாகவே இந்தியா இருக்கும் என்று ரங்கராஜன் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version