கிரிக்கெட்

கைமீறிப்போன ஆட்டத்தை வெற்றியாக்கிய தீபக் சஹார்: இந்தியா த்ரில் வெற்றி

Published

on

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றி கைமீறிப் போன நிலையில் அதிரடியாக விளையாடிய தீபக் சஹார் 69 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் இந்தியா நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதோடு தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 276 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிய நிலையில் முக்கிய ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா, ஷிகர் தவான், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்

இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் எடுத்தார் என்பதும் க்ருணால் பாண்ட்யா 35 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்திய அணி 193 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்ததால் வெற்றி பெறுவது கடினம் என்று எண்ணப்பட்டது. ஆனால் தீபக் சஹர் பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடி 69 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார் என்பதும், அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தீபக் சஹார் அதிரடி ஆட்டத்தால் நேற்றைய போட்டியில் இந்திய அணி 49.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தீபக் சஹார் நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே அவர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜூலை 23ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version