கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

Published

on

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.

இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இது 50வது போட்டி. இந்த 50 போட்டிகளில் இந்திய அணி 31 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய கிரிக்கெட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி 20 ஓவர்களில், 5 விக்கெட்கள் இழந்து 132 ரன்கள் அடித்தது.

அடுத்து 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா 6 பந்துகளுக்கு 8 ரன்கள் அடித்து இருந்தபோது டிம் வீசிய பந்தில் ரோஸ் டெய்லர் பிடித்த கேட்ச்சில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து பேட்டிங் செய்ய வந்த விராட் கோலி 12 பந்துகளுக்கு 11 ரன்கள் அடித்து இருந்த போதுடிம் சவுதி வீசிய பந்தில் டிம் சிஃபெர்ட் பிடித்த கேட்ச்சில் ஆட்டத்தை இழந்தார்.

பின்னர் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இணை நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். 33 பந்துகளுக்கு 44 ரன்கள் அடித்திருந்த போது விழுந்த விக்கேட்டில் ஷ்ரேயாஸ் வெளியேறினார். தொடர்ந்து ஷிவம் தூபே விளையாட வர 17வது ஓவர் 3 வது பந்தில் 6 அடித்து வெற்றியைப் பதிவு செய்தார்.

50 பந்தில் 57 ரன்கள் அடித்த கேல் ராகுல் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இன்னும் உள்ள 3 போட்டிகளில் ஒன்றில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version