பிற விளையாட்டுகள்

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

Published

on

ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் இந்திய அணிகள் சிறப்பாக ஜொலித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சற்றுமுன் நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஏற்கனவே காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையிலும் கடைசி லீக் போட்டி இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே சற்றுமுன் நடைபெற்றது.

இந்த போட்டியில் ஆவேசமாக இரு அணிகளும் விளையாடிய நிலையில் ஜப்பான் அணியை இந்திய அணி 5-3 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி வீரர்கள் அபாரமாக விளையாடி ஐந்து கோல்கள் போட்ட நிலையில் ஜப்பான் அணி மூன்று கோல்கள் மட்டுமே போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணி லீக் போட்டிகளில் நியூசிலாந்து, அர்ஜென்டினா, ஈஎஸ்டி மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வென்றுள்ளது என்பதும், ஆஸ்திரேலியாவுடன் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி இன்னும் ஒரு வெற்றியை பெற்று விட்டால் பதக்கம் கிடைப்பது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version