கிரிக்கெட்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை செய்துள்ளது.

ஏற்கனவே கடந்த 1986ஆம் ஆண்டு இதே லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் 2014ஆம் ஆண்டு இதே மைதானத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 7 ஆண்டுகள் கழித்து தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை நடந்த 18 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 11 போட்டியிலும், 3ல் இந்தியாவும் 4 போட்டிகள் டிரா ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் பட்டியலில் விராட் கோலி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் தென்னாபிரிக்காவின் ஸ்மித் மற்றும் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவில் பாயிண்ட்டிங் ஆகியோர் உள்ளனர்.

நேற்றைய போட்டியில் பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசியதே வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பும்ரா மற்றும் ஷமி ஆகிய இருவரும் நேற்று ஒன்பதாவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்து சாதனை செய்தனர். இதற்கு முன்னர் கபில்தேவ் மற்றும் மதன்லால் ஆகிய இருவரும் ஒன்பதாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் எடுத்ததே அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் முழு விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 364/10

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 391

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்: 298/8 டிக்ளேர்

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ்: 120/10

சிராஜ் எடுத்த மொத்த விக்கெட்டுக்கள்: 8

இஷாந்த் ஷர்மா எடுத்த மொத்த விக்கெட்டுக்கள்: 5

பும்ரா எடுத்த மொத்த விக்கெட்டுக்கள்: 3

ஷமி எடுத்த மொத்த விக்கெட்டுக்கள்: 3

ஆட்டநாயகன்: கே.எல்.ராகுல்

Trending

Exit mobile version