பிற விளையாட்டுகள்
வெற்றியை நோக்கி இந்திய ஹாக்கி: ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுமா?
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தற்போதைக்கு ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ள போதிலும் இன்னும் 4 அல்லது 5 பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
பிவி சிந்து, தீபிகா குமாரி, பூஜா ராணி, மேரிகோம், உள்பட ஒருசிலர் பதக்கம் பெறும் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இந்திய ஹாக்கி அணியும் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி உள்ளது
பரபரப்பாக நடந்த இந்திய அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 3 கோல்கள் அடித்தது என்பதும் அர்ஜென்டினா ஒரே ஒரு கோல் மட்டும் அடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணி போட்ட மூன்று கோல்களில் கடைசி மூன்று நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடுத்தடுத்து போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சார்பில் ஹர்மன்ப்ரீத் சிங், விவேக் சாகர், வருண் குமார் ஆகியோர் சிறப்பாக விளையாடி கோல் அடித்தனர். இந்த வெற்றியின் காரணமாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. காலிறுதி மற்றும் அரை இறுதியில் வெற்றி பெற்றுவிட்டால் இந்திய அணிக்கு பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்து இந்திய அணி வெளியேறியதை அடுத்து அந்த தோல்விக்கு இன்று அர்ஜென்டினாவை இந்திய அணி பழிவாங்கியுள்ளது என்பதும், ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய அர்ஜென்டினா அணியை இந்திய ஹாக்கி அணி வென்றதை அடுத்து நம்பிக்கையுடன் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.