கிரிக்கெட்

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்: ரோகித் ஷர்மா அபார சதம்!

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா சதம் விளாசி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

#image_title

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத ஆஸ்திரேலிய வீரர்கள் சீரான இடைவெளியில் நடையை கட்டினர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 63.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை சரணடைய வைத்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 77 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தாலும் கேப்டன் ரோகித் ஷர்மா பொறுப்பாக விளையாடி வருகிறார். அபாரமாக விளையாடி வரும் அவர் 109 ரன்கள் குவித்து தற்போது வரை களத்தில் உள்ளார்.

கே.எல்.ராகுல் 20, அஷ்வின் 23, புஜாரா 7, விராட் கோலி 12, சூர்யக்குமார் யாதவ் 8 என வரிசையாக நடையை கட்டினாலும், கேப்டன் ரோகித் ஷர்மா 115 ரன்களுடனும் ஜடேஜா 28 ரன்களுடன் களத்தில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். தற்ப்போது வரை இந்திய அணி 217 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

Trending

Exit mobile version