உலகம்

மரங்கள் மீது தாக்குதல் நடத்திய இந்தியா: பாகிஸ்தான் வழக்குப் பதிவு!

Published

on

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறுகிறார்கள்.

ஆனால் இந்த எண்ணிக்கையை இந்திய எதிர்க்கட்சிகளும், சர்வதேச ஊடகங்களும் மறுத்துள்ளனர். தேர்தலை மனதில் வைத்து 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பொய் கூறுகிறார்கள் என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கான ஆதாரத்தை கொடுக்குமாறு வலியுறுத்துகிறார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து 19 மரங்கள் மீது அடையாளம் தெரியாத இந்திய விமானப் படை வீரர்கள் குண்டுவீசி இயற்கையை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் வனவியல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதனை பாகிஸ்தான் ஊடகங்களும் உறுதி செய்துள்ளது.

மற்றொரு நாட்டின் இயற்கை வளங்கள் மீதும், சுற்றுச் சூழல் மீதும் ராணுவத் தாக்குதல் நடத்தக் கூடாது, இது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது என ஐநா விதிகள் கூறுகிறது. இதனையடுத்து இந்தியா சூழல் அழிப்பு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஐநாவில் பாகிஸ்தான் முறையிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending

Exit mobile version