இந்தியா

ஐந்தாவது தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்: ஒரே ஒரு டோஸ் போட்டால் போதும்!

Published

on

இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி மற்றும் ஃபைசர் ஆகிய நான்கு தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 5வது தடுப்பூசி இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிஉள்ளது.

இந்தியாவில் அவசர தேவைக்காக ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மட்டுமே வழி என்ற நிலையில் உலகம் முழுவதும் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி மற்றும் ஃபைசர் ஆகிய நான்கு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐந்தாவது தடுப்பூசியாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை இந்திய அரசு அனுமதித்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மற்ற தடுப்பூசிகள் இரண்டு டோஸ் போடவேண்டிய நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை ஒரே ஒரு டோஸ் மட்டும் போட்டால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜான்சன் ஜான்சன் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version