கிரிக்கெட்

ஒரே பிரிவில் இந்தியா – பாகிஸ்தான்: களைகட்ட போக்கும் டி-20 உலககோப்பை

Published

on

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி என்றாலே இருநாட்டு கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அனல்பறக்கும் என்பதும் இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்று இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வெறித்தனமான விருப்பத்தில் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறாத நிலையில் தற்போது விரைவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த போட்டித் தொடரில் குருப் 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடம்பெற்றுள்ளன. குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
எனவே இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி கண்டிப்பாக நடைபெறும் என்பதால் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை இந்திய அணி வலுவாக உள்ளதால் பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் குருப் 2 பிரிவுகள் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியையும் இந்தியா பந்தாடி விடும் என்றும் நியூசிலாந்து மட்டுமே சவால் கொடுக்கும் வகையிலான அணி என்பதும் குறிப்பிடத்தக்கவை குரூப்-1 பிரிவில் உள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய நான்கு அணிகளும் வலுவான அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version