கிரிக்கெட்

இந்தியா-இங்கிலாந்து டி20 தொடர்: இன்று முதல் ஆரம்பம்

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே நான்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்தது என்பதும் இதில் 3-1 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே இன்று முதல் டி20 தொடர் தொடங்க உள்ளது. இன்றைய போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை வெல்ல இரு அணிகளும் தீவிரமாக முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் ராகுல் திவேத்தியா, வருண் சக்கரவர்த்தி, சூரியகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று முதல் டி20 போட்டி தொடரி, வரும் 14ஆம் தேதி இரண்டாம் டி20 போட்டியும், 16ஆம் தேதி மூன்றாம் டி20 போட்டியும், 18-ந்தேதி 4-வது போட்டியும், 20ஆம் தேதி ஐந்தாம் டி20 போட்டியும் நடைபெறும் என்பதும் ஐந்து போட்டிகளும் இதே மைதானத்தில்தான் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின் மார்ச் 23ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடர் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version