கிரிக்கெட்

8 ஓவரில் 2 விக்கெட்டுக்கள்: இந்த டெஸ்டும் இரண்டு நாளில் முடிந்துவிடுமா?

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது.

இன்றைய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த நிலையில் சற்று முன் வரை இங்கிலாந்து அணி 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்தது போல் இந்த டெஸ்ட் போட்டியும் இரண்டு நாட்களில் முடிவடைந்து விடுமோ என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இன்றைய போட்டியில் இரண்டு விக்கெட்டுகளையும் கடந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு பெற்ற அக்சர் பட்டேல் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர்களான கிராவல் மற்றும் சிப்லே ஆகிய இருவருமே தலா 9 மட்டும் இரண்டு ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர் என்பதும், தற்போது கேப்டன் ரூட் மட்டும் பெயர்ஸ்டோ ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை வென்று விடும் என்பதும் இங்கிலாந்து அணி வென்றால் தொடர் சமன் செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது. இந்த போட்டியை அடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி தொடர் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே மைதானத்தில் மார்ச் 12ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஐந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version