கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்

Published

on

அகமதாபாத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இதனை அடுத்து தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் 25 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க ஆட்டக்காரர் கிராலே 53 ரன்கள் எடுத்திருந்தபோதிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சிப்ளே மற்றும் பெயர்ஸ்டோ ஆகிய இருவரும் டக் அவுட் ஆகினர். மேலும் கேப்டன் ரூட் 17 ரன்களில் அவுட் ஆகி விட்டதை அடுத்து தற்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் போப் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

இன்றைய போட்டியில் இந்தியாவின் அக்ஷர் பட்டேல் மிக அருமையாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று நடைபெற்று வரும் மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதும், நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு முனை ரிலையன்ஸ் எண்ட் என்றும் மைதானத்தின் மற்றொரு முனை அதானி எண்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version