கிரிக்கெட்

INDvENG – 337 ரன்களுக்கு ஆல்-அவுட்… ஃபாலோ ஆன் ஆனது இந்தியா! – தோல்வியடையும் ஆபத்து

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முன்னதாக இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 578 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா, இங்கிலாந்தை விட 241 ரன்கள் பின் தங்கிய நிலையில் தான் உள்ளது. இதன் மூலம் இந்தியா, ஃபாலோ-ஆன் ஆகியுள்ளது.

தற்போது இங்கிலாந்து, இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கி விறுவிறுவென ஸ்கோர் செய்யலாம். அல்லது மீண்டும் இந்திய அணியையே களமிறக்கி விடலாம். எப்படி என்றாலும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறத் தான் அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக, ரிஷப் பன்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் முறையே 91 மற்றும் 85 ரன்கள் எடுத்தனர். சுந்தர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலந்து சார்பில் டோம் பெஸ், அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இரண்டாவது இன்னிங்ஸிலாவது இந்திய அணி, நல்ல பந்து வீச்சை மேற்கொள்ளுமா என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 

Trending

Exit mobile version