கிரிக்கெட்

4 பந்துகளில் கடைசி 3 விக்கெட்டுக்கள்: இந்தியா ஆல்-அவுட்!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாம் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வந்த நிலையில் கடைசி 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 191 ரன்களில் ஆல்-அவுட் ஆகியுள்ளது.

இன்று ஓவல் மைதானத்தில் ஆரம்பித்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து இந்தியா பேட்டிங்கில் களமிறங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் தலா 11 மற்றும் 17 ரன்களில் அவுட் ஆகினர்.

இதனை அடுத்து புஜாரா 4 ரன்களிலும், விராட் கோலி 50 ரன்களிலும், ஜடேஜா 10 ரன்களிலும் அவுட் ஆனார்கள். ரஹானே 14 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும், அவுட் ஆனார்கள் இந்த நிலையில் ஷர்துல் தாக்கூர் ஓரளவுக்கு நிலைத்து விளையாடி 57 ரன்கள் எடுத்தார். இருப்பினும் அவர் அவுட் ஆனதும், கடைசி 3 விக்கெட்டுகள் 4 பந்துகளில் விழுந்துவிட இந்தியா 191 ரன்களில் ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களில் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும் ராபின்சன் 3 விக்கெட்டுகளையும் ஆண்டர்சன் மற்றும் ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு விக்கெட் ரன் அவுட் முறையில் அவுட் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்னும் ஒருசில நிமிடத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version