தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் லோன் கேட்ட வேட்பாளர்!

Published

on

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் லோன் கேட்ட வேட்பாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் நாமக்கல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் ரமேஷ். இவர் திடீரென வங்கிக்கு சென்று ரூபாய் 46 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்தார்.

அவர் கடன் கேட்ட காரணத்தை பார்த்த வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தான் போட்டியிடும் வாக்காளர் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கடனை விண்ணப்பித்ள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version