கிரிக்கெட்

அவர் வேண்டாம்.. அடித்து சொன்ன பிசிசிஐ டாப் தலைகள்.. கே. எல் ராகுலை ரோஹித் நீக்கியது ஏன்?

Published

on

இந்தூர்: இந்திய அணியில் இருந்து கே எல் ராகுலை கேப்டன் ரோஹித் சர்மா தூக்கியதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்றது. இதனால் இந்த கோப்பை மீண்டும் இந்தியா வசம் ஆகி உள்ளது.

இந்த நிலையில்தான் மூன்றாவது போட்டி இன்று தொடங்கி உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி இந்தூரில் நடக்கிறது.

இன்று ஆடும் ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (கேட்ச்), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (வாரம்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், டோட் மர்பி, மேத்யூ குஹ்னெமன் ஆகியோர் ஆடுகின்றனர்.

இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் ஆடுகின்றனர். இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்டபடியே கே எல் ராகுல் நீக்கப்பட்டு உள்ளார். அணியில் ஓப்பனிங் வீரராக கில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

பிசிசிஐ அமைப்பில் சில டாப் தலைகள் ராகுல் வேண்டாமே வேண்டாம் என்று கூறியதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள். நேற்று நடந்த கூட்டம் ஒன்றில்.. ராகுல் மோசமாக ஆடுகிறார். அவர் மிக மோசமான பார்மில் இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் அவரை அணியில் எடுப்பது, மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது சரியாக இருக்காது. அவரை நீக்குங்கள் என்று கூறி உள்ளனர். பிளேயிங் லெவனை கேப்டன் – கோச் ஆகியோர்தான் தேர்வு செய்வார்கள். ஆனாலும் இந்த முறை பிசிசிஐ இதில் நேரடியாக தலையிட்டு விமர்சனம் வைத்து உள்ளதாம்.

அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. அதனால் அவரை இனியும் அணியில் எடுக்க கூடாது என்று கூறி உள்ளனர். இதுதான் அவரை நீக்குவதற்கான காரணம் என்கிறார்கள். ராகுலை நீக்கும் விருப்பம் ரோஹித்திற்கு இல்லை என்றாலும் அவரை நீக்க இதுவே காரணம் என்கிறார்கள்

Trending

Exit mobile version