கிரிக்கெட்

“கெத்து காட்ட நாங்க ரெடி..!”- இந்தியாவுக்கு சவால்விடு நாதன் லயன்

Published

on

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை முடித்துக் கொண்டு டெஸ்ட் தொடரை ஆரம்பிக்கவிருக்கிறது. நாளை, 4 போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகிறது.

இந்தப் போட்டி மற்றும் மொத்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், ‘நான் இந்தியாவுக்கு எதிராக எந்த மாதிரியான திட்டங்களை வைத்துள்ளேன் என்பது குறித்து தெரிவிக்க முடியாது. ஆனால், எங்கள் அணியில் ஒரு நல்ல வைப் உருவாகியுள்ளது. இதுதான் நான் விளையாடியதிலேயே மிகவும் உறுதியான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. நாங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறோம்.

இந்தியா, ஆக்ரோஷமாகவும் அதிரடியாகவும் விளையாடக் கூடிய கிரிக்கெட் அணி. அந்த அணிக்கு எதிராக விளையாடப் போவது மிகுந்த உற்சாகத்தையும் மன மகிழ்வையும் எனக்குத் தருகிறது. இந்திய அணியை வீழ்த்தி, டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று உறுதிபட கூறியுள்ளார்.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version