கிரிக்கெட்

2வது டெஸ்ட் போட்டிக்கான அணி எது? – பிஹைண்ட் தி செலக்ஷன்

Published

on

ஆஸ்திரேலிய மண்ணில் மட்டுமல்லாது, தனது இத்தனை ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பலத்த அடி வாங்கியது கோலி தலைமையிலான இந்திய அணி. இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து  வாங்கிக் கட்டிக் கொண்டது.

இப்போது பெர்சனல் காராணங்களுக்கான கேப்டன் கோலி ஊருக்கு திரும்ப, ஒட்டுமொத்த பார்வைகளும், எதிர்பார்ப்புகளும் ‘சைலண்ட் மோட்’ கேப்டன் ரஹானே மீது திரும்பி இருக்கிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது போட்டியான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் வரும் 26-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

INDvAUS – வரலாற்றுத் தோல்வியடைந்த இந்தியா… மனமுடைந்து குமுறிய கோலி… ஓப்பன் டாக்!

இந்நிலையில், விராட் கோலிக்கு பதிலாக லோகேஷ் ராகுல் களமிறக்கப்படுவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது.

அடுத்த சச்சின், அடிச்சா சேவாக், நடந்தா லாரா என்று வர்ணிக்கப்பட்ட இளம் வீரர் ப்ரித்வி ஷா, முதல் டெஸ்டின் இரு இன்னிங்ஸிலும் தனது கால்களுக்கும் பேட்டுக்கும் இடையே மிகப்பெரிய வெற்றிடத்தை காட்டி, இந்த போட்டுக்கோ! என்று ஆஸி., பவுலர்களை உசுப்பேத்தி அவுட்டாகிச் சென்றார். அவரது டெக்னிக் சரியில்ல என்று இப்போது விமர்சனங்கள் எழுவதால், ப்ரித்விக்கு பதிலாக பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் அடித்த மற்றொரு இளம் வீரர் ஷுப்மன் கில் -க்கு ஓப்பனராக களமிறங்க வாய்ப்பு கிடைக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோல், விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹாவின் இடத்திற்கும் மாற்று வருகிறது. பயிற்சிப் போட்டியில் அதிரடியாக சதம் அடித்த ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்றே தெரிகிறது.

மேலும், ஹனுமா விஹாரியை நான்காவது அல்லது ஐந்தாவது ஆர்டரில் களமிறக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு பின்னடைவாக காயம் காரணமாக ஷமி-யும் தொடரில் இருந்து வெளியேறி இருப்பதால், நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version