தமிழ்நாடு

அதிகரிக்கும் கொரோனா: சுகாதாரத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை!

Published

on

தமிழகத்தில் H3N2 வகை இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

#image_title

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. தற்போது இந்தியா முழுவதும் இந்த பாதிப்பு அதிகரித்து தான் வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மேலும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. தனிமைப்படுத்திக்கொள்ள சொல்வதே கூடுதலாகப் பரவக்கூடாது என்பதற்காகத்தான் என்றார்.

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version