தமிழ்நாடு

மாதாந்திர ஊதியம் ரூ.1000 அதிகரிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Published

on

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மாதாந்திர ஊதியம் ரூபாய் 1000 அதிகரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்திலுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கான புதிய அறிவிப்புகள் இன்று சட்டசபையில் வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் அது 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் ஊராட்சி சாலைகள் மேம்படுத்துவதற்கு மற்றும் பாலங்கள் கட்டப்படுவதற்கு 2097 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி துறை அறிவித்துள்ளது. மேலும் ஊராட்சி துறையிலுள்ள 12 ஆயிரத்து 125 நூலகங்கள் மேம்படுத்தப்படும் என்றும் 233 கோடியில் அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் என்றும் ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

மேலும் மாவட்ட திட்ட குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் இந்த திட்டக்குழு தலைவராக மாவட்ட ஆட்சித்தலைவர் இருப்பார் என்றும் குழுவின் உறுப்பினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இருப்பார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த குழுவானது மாவட்டத்தின் தேவைகளை அறிந்து திட்டங்கள் ஏற்படுத்தவும் செயல்படுத்தவும் உதவி செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஊரக மற்றும் நகர பகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற உடன் மாவட்ட திட்ட குழு அமைக்கப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையின் விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version