இந்தியா

வீட்டு உபயோக சிலிண்டருக்கான டெபாசிட் கட்டணம் அதிகரிப்பு

Published

on

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் டெபாசிட் கட்டணத்தை மத்திய அரசு அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது என்பதும் தற்போது 1030 ரூபாய் என்ற அளவில் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதிதாக வீட்டு உபயோகத்துக்கான கேஸ் சிலிண்டர் வாங்குபவர்களுக்கான டெபாசிட் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கேஸ் சிலிண்டர் வாங்குவதை வாங்கியவர்களுக்கு என்ற கட்டணம் உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

வீட்டு உபயோக சிலிண்டருக்கான டெபாசிட் கட்டணம் இதுவரை ரூ.1,450 என இருந்த நிலையில் தற்போது ரூ. 2,200 ஆக அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எனவே புதிய சிலிண்டர் இணைப்பு வாங்குவதற்கான டெபாசிட் கட்டணம் ரூ. 750 உயர்த்தப்பட்டுள்ளது

5 கிலோ எடை கொண்ட சிறிய கேஸ் சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.1,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை சிறிய கேஸ் சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.750 என இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

 

seithichurul

Trending

Exit mobile version