பர்சனல் ஃபினான்ஸ்

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

Published

on

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய நிதி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

பொதுவாக வருமான வரியை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் 2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஒரு மாதங்கள் கூடுதலாக நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்பவர்கள் 1000 ரூபாய் முதல் 10,000 வரை அபராதமும், செலுத்த வேண்டிய வரியிலிருந்து கூடுதலாக 1 சதவீதமும் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பால் வரி செலுத்த வேண்டிய தனி நபர்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் பயன் அடைவார்கள்.

seithichurul

Trending

Exit mobile version