வீடியோ செய்திகள்

நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி அதிகாரிகள் ஆய்வு: பின்னணி என்ன?

Published

on

நடிகர் விஜய் வீட்டில், சென்ற மாதம் ஐடி ரெய்டு நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் சோதனை செய்யப்பட்டது.

விஜய் வீட்டில் வருமான வரி துறையினர் செய்த சோதனையின் முடிவில், விஜய் சம்பளம் மற்றும் அவர் செலுத்திய வரி உள்ளிட்ட விவரங்களையும் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

விஜய் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டில், அவர் வரி செலுத்தவில்லை என்று செய்திகள் மற்றும் விமர்சனங்கள் வெளியாகி வந்தன.

ஆனால், இன்று அதற்கு நேர்மாறாக, விஜய் முறையாக வரி செலுத்தி வருகிறார் என்றும், பிகில் படத்திற்காக அவருக்கு 50 கோடி ரூபாயும், மாஸ்டர் படத்திற்காக 80 கோடி ரூபாயும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பளங்கள் அனைத்திற்கும் அவர் முறையாக வரி செலுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version