தமிழ்நாடு

முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை!

Published

on

கோவையை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரின் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர்களின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருவதாகவும் அவரது வீட்டின் வெளிக்கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு வீட்டின் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே டெண்டர் எடுப்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கூறப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் சோதனை நடப்பதாக வெளியான தகவலை அடுத்து கோவையைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி வீட்டின் முன் போலீசாரும் குவிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது கோவை சுகுணாபுரத்தில் உள்ள வீட்டில் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாகவும் மேலும் அவருக்கு சொந்தமான இடத்தில் சோதனை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் நடைபெறும் சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது சோதனையின் முடிவில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version