தமிழ்நாடு

திமுக, மதிமுகவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை: எதிர்க்கட்சியினர் மட்டும் குறிவைக்கப்படுகிறார்களா?

Published

on

மத்தியில் ஆட்சி செய்வது எந்த கட்சியாக இருந்தாலும் தங்களது எதிர்க்கட்சிகளை பயமுறுத்த அவர்கள் எடுக்கும் ஒரே ஆயுதம் வருமானவரித்துறை ரெய்டு என்பதாகத்தான் இருக்கும் என்பது பல ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து வருகிறது.

குறிப்பாக பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து எதிர்க்கட்சிகளை பயமுறுத்த அவ்வபோது வருமான வரித்துறை சோதனை செய்து வருவதாக கூறப்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது,

குறிப்பாக தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தாராபுரம் தொகுதியில் களமிறங்கியுள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள திமுக மற்றும் மதிமுக பிரமுகர்களின் வீடுகளில் திடீரென வருமான வரி சோதனை நடந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்து உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் குறி வைத்து மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

பாஜக தலைவர் எல். முருகன் அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் வருமான வரி சோதனை என்ற பெயரில் மிரட்டுவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் அதிமுக பாஜகவினர் வீடுகளில் எந்த விதமான வருமானவரி சோதனை செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version