இந்தியா

வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Published

on

வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு என்றும், ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்க்ள் வரி செலுத்த தேவையில்லை என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். எனவே ரூ.7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு டாக்ஸ் ரிபேட்(தள்ளூபடி) வழங்கப்படும்

மேலும் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.50 லட்சத்தில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் வருமான வரி செலுத்துவோர் மகிழ்ச்சி அடைவார்கள்

3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 5% வரி செலுத்த வெண்டும் என்றும், டக்ஸ் ரிபேட் உள்ளதால் இந்த பிரிவினர் வரி செலுத் தேவையில்லை என்றும், 6 முதல் 9 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 10% வருமான வரி செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மேலும் 9 முதல் 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 15% வருமான வரி செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரித்தாக்கலுக்கான படிவம் எளிமையாக்கி புதுப்பிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவிப்பு செய்துள்ளார்.

மேலும் இந்த வரி வரம்பு புதிய வருமான வரி முறையை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே என்றும், 80சி பயன்படுத்தி வரி விலக்கு பெற்றால் இந்த வரி வரம்புகள் கீழ் விலக்கு பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 80சி பயன்படுத்தி வரி விலக்கு பெற்றால் இந்த வரி வரம்புகள் கீழ் விலக்கு பெற முடியாது என்ற அறிவிப்பால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version