சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜூக்கு அதிர்ச்சி கொடுத்த வருமான வரித்துறை.. மாஸ்டர் நிகழ்வை மறக்க முடியுமா?.

Published

on

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிக் கொண்டிருந்தபோது திடீரென வருமானவரித்துறையினர் விஜய்யை அழைத்து சென்ற சம்பவம் யாருக்கும் மறந்து இருக்காது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ்-க்கு வருமானவரித்துறை திடீரென அழைப்பு விடுத்தது அடுத்த அவர் அச்சப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். குறைந்த வயதில் வருமான வரி அதிகம் செலுத்தும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு விருது வழங்கி பாராட்டும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவருக்கும் விருது வழங்குவதாகவும் வருமான வரி துறையினர் அவருக்கு போன் செய்து தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்ட நிலையில் அவர் ’வருமானவரித்துறை போன் செய்தபோது முதலில் அச்சப்பட்டேன் என்றும் அதன் பிறகு அவர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும், பின்னர் விருது வழங்குவதாக கூறியதை அடுத்து மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

மக்கள் செலுத்தும் வருமான வரி தொகை எங்கே செல்கிறது? எதற்காக பயன்படுகிறது? என்பதை வருமானவரித்துறையினர் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் நாம் செலுத்தும் வரி ஒரு நல்ல காரியத்துக்கு பயன்படுகிறது என்று மக்கள் தாங்களாகவே முன்வந்து மகிழ்ச்சியுடன் வரி செலுத்துவார்கள் என்றும் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’வாரிசு’ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்காக தான் ’தளபதி 67’ படத்தின் அப்டேட்டை வெளியிடவில்லை என்றும் இன்னும் பத்து நாட்களில் முதல் அறிவிப்பு வெளியாகும் என்றும் அதன் பிறகு அடுத்தடுத்து அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் நேற்று ரசிகர் ஒருவர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ’உயிரிழக்கும் அளவுக்கு சினிமா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் ரசிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் சினிமா என்பது வெறும் சினிமா தான், அவ்வளவு முக்கியமானது அல்ல படம் பார்த்துவிட்டு பாதுகாப்பாக வீட்டுக்கு செல்வதே முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாடு, தமிழகம் இரண்டில் எது உங்களுக்கு விருப்பம் என்று கேட்ட கேள்விக்கு இந்த நிகழ்ச்சி தொடர்பாக மட்டும் பேசலாம் என்றும் ஆனால் எனக்கு தமிழ்நாடு என்று தெரிவிப்பதிலேயே விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version