இந்தியா

உபியில் பெரும்பான்மையை நெருங்கியது பாஜக: எதிர்க்கட்சியாகும் அகிலேஷ் கட்சி

Published

on

உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்தது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைத்து விடலாம் என்ற நிலையில் தற்போது பாஜக 183 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இன்னும் 19 தொகுதிகளில் மட்டும் முன்னிலை பெற்றால் அந்த கட்சி வெற்றி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது .

உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி ஜனதா கட்சியை 99 இடங்களில் முன்னிலையில் உள்ளதை அடுத்த அக்கட்சி எதிர்க்கட்சி ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி கிட்டத்தட்ட ஆட்சியைப் பிடித்து விட்டது என்பதும் அதேபோல் உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version