இந்தியா

திருப்பதி தேவஸ்தானம் உள்பட 6 ஆயிரம் ஆன்மீக அமைப்புகளின் உரிமம் ரத்து: மத்திய அரசு அதிரடி

Published

on

திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்பட 6 ஆயிரம் ஆன்மீக அமைப்புகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உள்ள ஆன்மீக அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து நிதி உதவி பெற்று ஆன்மீக மற்றும் சமூக பணிகளை செய்து வருகின்றன. இதற்காக மத்திய அரசிடம் FCRA  என்ற உரிமம் பெற வேண்டும் என்பதும் அந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான உரிமையை புதுப்பிக்காத காரணத்தால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்பட 6 ஆயிரம் தொண்டு சமய நிறுவனங்களின் அமைப்புகள் தடை உரிமம் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீரடி சாய்பாபா சன்ஸ்தான், ராமகிருஷ்ணா மடம் உள்பட 6 ஆயிரம் சமய நிறுவனங்களின் உரிமம் புதுப்பிக்கப்படாததால் அவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் சமய வளர்ச்சி, கல்வி, மருத்துவ சேவை உள்ளிட்ட பணிகளுக்காக இந்த ஆன்மிக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன என்பதும் இந்த ஆன்மீக அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான நிதியை வாரி வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்பட 6 ஆயிரம் தொண்டு சமய நிறுவனங்களின் உரிமம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து இனி நிதியை பெற இயலாது என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version