தமிழ்நாடு

நிலக்கரிக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி பணம் தரவில்லையா? தமிழ்நாடு மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

Published

on

தமிழ்நாடு உள்பட 3 மாநிலங்கள் நிலக்கரிக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி பணம் தரவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் கோடையில் மின்சாரம் உபயோகம் அதிகரிப்பதன் காரணமாக சில மாநிலங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலக்கரி கிடைக்காத நிலையில் பல மாநிலங்களில் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது .

அடுத்த மாத இறுதிக்குள் நிலக்கரியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நான்கு மாநிலங்கள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது .

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மூலம் செயல்படும் அனல் மின் நிலையங்களை மாநில அரசுகள் உடனே இயக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள மத்திய அரசு தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் தங்களது ஆலோசனைகளை செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளது.

மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நிலக்கரி வாங்கியதற்கான ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாயை இதுவரை கோல்-இந்தியா நிறுவனத்திற்கு செலுத்தவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version