உலகம்

பல்வேறு நாடுகளில் திடீரென முடங்கிய பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்! என்ன காரணம்?

Published

on

இன்றைய உலகம் கிட்டத்தட்ட சமூக ஊடகங்களால் தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் சமூக ஊடகங்கள் திடீரென முடங்கினால் பல பணிகள் முடங்கி விடும் என்ற நிலையில் இருக்கிறது என்பதுதான் உண்மை.

இந்த நிலையில் நேற்று இரவு இந்தியா உட்பட பல நாடுகளில் திடீரென பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஒரு சில சமூக ஊடகங்கள் திடீரென முடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் 45 நிமிடங்களுக்கு இந்த முடக்கம் இருந்ததாகவும் இதனை அடுத்து சமூக வலைதள பயனாளிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது ஹேக்கர்கள் கைவரிசையா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளிவரவில்லை.

ஆனால் அதே நேரத்தில் 45 நிமிடங்களுக்குப் பின்னர் ஃபேஸ்புக் வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வழக்கங்கள் சீரான தான் பயனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இருப்பினும் டுவிட்டர் சமூக வலைதளத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதால் சமூக வலைதளங்களில் முடங்கல் குறித்து அதற்கென ஹேஷ்டேக் உருவாக்கி சர்வதேச அளவில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை முடக்கும் அளவுக்கு ஹேக்கர்கள் கைவரிசை பெருகிவிட்டதா? அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version