தமிழ்நாடு

சென்னை, கோவை, திருச்சியில் இன்று தடுப்பூசி இல்லை: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

Published

on

சென்னை, கோவை மற்றும் திருச்சி உள்பட ஒருசில மாவட்டங்களில் இன்று தடுப்பூசி போடப்படாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை என சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது. சென்னை உள்பட முக்கிய பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் இல்லாததற்கு தடுப்பூசி கையிருப்பு இல்லை என்பதே காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசிகள் மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது

கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட மாட்டாது என அம்மாநகராட்சி நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டத்திலும் அதேபோல் இன்று கோவிட் தடுப்பூசி முகாம் இல்லை என மாவட்ட ஆட்சியர் சிவராசு விளக்கம் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்திலும் இன்று தடுப்பூசி போடப்படாது என மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் தற்போது தான் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு அனைவரும் தடுப்பூசி போட முன் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கு தேவையான தடுப்பு ஊசிகளை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று மாலை அல்லது நாளை கலை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தடுப்பூசி வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version