உலகம்

ஒரு கிலோ வெங்காயம் ரூ.1200.. எந்த நாட்டில் தெரியுமா?

Published

on

இந்தியாவைப் பொறுத்தவரை வெங்காயம் என்பது ஒரு அத்தியாவசியமான உணவு என்பதும் வெங்காயம் இல்லாமல் கிட்டத்தட்ட எந்த உணவையும் தயார் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வட இந்தியர்கள் வெங்காயம் இல்லாமல் சாப்பிடவே மாட்டார்கள் என்பதும் வெங்காய விலை உயர்வு என்பது ஒரு ஆட்சியை மாற்றும் அளவுக்கு நடந்த சம்பவங்கள் இந்திய வரலாற்றில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெங்காய விலை உயரும் போதெல்லாம் அது குறித்த மீம்ஸ்கள் பதிவாகி வரும் என்பதும் திருமணத்திற்கு வெங்காயத்தை பரிசாக கொடுத்த சம்பவங்களும் தமிழ்நாடு உள்பட பல பகுதிகளில் நடந்து உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டில் வெங்காயத்தின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 1200 எனவிற்பனை ஆகி வருவதாகவும் இது கோழி இறைச்சியை விட அதிக விலை என்றும் கூறப்படுகிறது.

வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உயர்ந்து கொண்டே வந்த நிலையில் தற்போது பல்பொருள் அங்காடிகளில் ஒரு கிலோ வெங்காயம் இந்திய ரூபாயில் ரூபாய் 1200 வரை உயர்ந்துள்ளது. இது கோழி மற்றும் பன்றி இறைச்சியை விட விலை அதிகம் என அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளார். மணிலாவில் உள்ள பல உணவகங்களில் வெங்காயம் போடுவதே நிறுத்திவிட்டனர் என்றும் குடும்ப உறுப்பினர்களும் வெங்காயத்தை வாங்குவதையே நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 14 ஆண்டுகளில் பிலிப்பைன்ஸ் நாடு பணவீக்கம் காரணமாக கடும் திண்டாட்டத்தில் இருந்து வருகிறது என்பதும் அந்நாட்டின் அதிபர் பெர்னாடிக் மார்க்கோ என்பவர் இதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பிலிப்பைன்ஸ் நாடு இன்னும் சரிவிலிருந்து மீளவில்லை என்று கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மொத்த வெங்காய தேவையில் 10 சதவீதம் மட்டுமே உள்நாட்டு உற்பத்தி என்றும் மீது அனைத்தும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் தான் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எங்கள் நாட்டின் விவசாயத் துறை கணிசமான சவாலுக்கு உட்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொருளாதார மற்றும் வேளாண் பேராசிரியர் ஜெனி நாவினா என்பவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பிலிப்பைன்ஸ் நாட்டின் மக்களும் ஆண்டுக்கு சராசரியாக 2.34 கிலோ வெங்காயத்தை உண்கின்றனர் என்றும் ஆனால் அந்த அளவுக்கு வெங்காயம் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசு இந்த தகவலை மறுத்துள்ளது. நாடு தேவையான அளவு வெங்காயம் உள்பட அனைத்து விவசாய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது என்றும் ஒரு சில நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வெங்காய அறுவடை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

வெங்காயத்தின் விலை 1 கிலோ 1200 என்பது பிலிப்பைன்ஸ் மக்களை காட்டும் அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில் வெங்காயம் இல்லாமல் சமைப்பது எப்படி என்பதை தற்போது கூகுளில் அந்நாட்டு மக்கள் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version