தமிழ்நாடு

12 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே தனிச்சின்னம்: அதிர்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள்

Published

on

ஒரு மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளில் 5% தொகுதிகளில் ஒரு கட்சி போட்டியிட்டால் மட்டுமே அந்த கட்சிக்கு பொது சின்னம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் புதிய விதிமுறை ஒன்றை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் மே மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திமுக இந்த முறை குறைந்தது 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என திட்டமிட்டுள்ளது. மீதி உள்ள 34 தொகுதிகளை தான் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்கும் என்று கூறப்படுவதால் பெரும்பாலான கட்சிகளுக்கும் ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தற்போது புதிய விதிமுறை ஒன்றில் விதித்துள்ளது. அதன்படி ஒரு மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளில் 5 சதவீத தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே தனி சின்னம் கிடைக்கும். அந்த வகையில் தமிழகத்தைப் பொருத்தவரை 12 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே தனி பொதுச்சின்னம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமாக உள்ளிட்ட கட்சிகளுக்கு தனிச் சின்னம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

Trending

Exit mobile version