இந்தியா

500 புதிய விமானங்கள், 100 பில்லியன் டாலர் புதிய முதலீடு.. டாடாவின் ஏர் இந்தியா அசத்தல்..!

Published

on

டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 500 புதிய விமானங்களை வாங்க இருப்பதாகவும் இதற்காக 100 பில்லியன் டாலர் புதிய முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கி சரியாக ஒரு ஆண்டு ஆனதை அடுத்து இந்த ஒரு ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனம் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சிறந்த சேவை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான கவனிப்பு காரணமாக ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய பல பயணிகள் முன்வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமானங்களை வாங்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது 500 புதிய விமானங்களை வாங்க இருப்பதாகவும் இதற்காக 100 பில்லியன் டாலர் புதிய முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

250 ஏர் பஸ்கள் மற்றும் 210 போயிங் விமானங்களை வாங்க டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் ஆர்டர் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக. மேலும் A320neos மற்றும் A350 விமானங்களும் வாங்க இருப்பதாகவும், அதேபோல் 737 MAX ஜெட் விமானங்களில் 190, 20 787 அகல உடல்கள் மற்றும் 7710 7710 ஆகிய 220 போயிங் விமானங்களும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏர்பஸ் மற்றும் ஏர் இந்தியா இடையே சமீபத்தில் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது என்று கூறப்படுகிறது. ஜனவரி 27 அன்று போயிங் விமான நிறுவனத்துடன் ஏர் இந்தியா ஒப்பந்தம் செய்தது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏர் இந்தியா தற்போது உலக தரம் வாய்ந்த விமானங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய இருப்பதை அடுத்து நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏர்பஸ் மற்றும் அதன் போட்டி தயாரிப்பாளரான போயிங் ஆகிய இரண்டு நிறுவனங்களிடமும் கிட்டத்தட்ட சரிவுசமான ஆர்டர்களை ஏர் இந்தியா கொடுத்துள்ளது என்பதும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா கைப்பற்றிய இந்த ஓராண்டு காலத்தில் 27 சதவீதம் விமானம் அதிகரித்து உள்ளது என்றும் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்திடம் 100 விமானங்கள் உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. தற்போது ஆர்டர் செய்துள்ள 500 விமானங்களும் படிப்படியாக டெலிவரி செய்யப்படும் என்றும் கூறப்படுவதால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஏர் இந்தியாவிடம் கிட்டத்தட்ட 600 விமானங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version