இந்தியா

பள்ளிகளில் தாய்மொழி கட்டாயம், மீறும் பள்ளிகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம்: முதல்வர் எச்சரிக்கை!

Published

on

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தாய் மொழி கட்டாயம் என்றும் தாய் மொழி இல்லாமல் பள்ளி நடத்தும் நிர்வாகிகளுக்கு 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் பத்தாம் வகுப்பு வரை தங்களுடைய தாய்மொழியில்தான் கல்வி பயில வேண்டும் என பல கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றார்கள் என்பதும் தாய்மொழியை மாணவர்கள் மறந்துவிடக் கூடாது என்றும் ஆரம்ப நிலை வகுப்புகளில் இருந்து தாய்மொழியைப் படித்து வருவது மாணவர்களுக்கு பிற்காலத்தில் பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பல பள்ளிகளில், குறிப்பாக ஆங்கில மீடியம் பள்ளிகளில் தாய்மொழி இல்லாமலேயே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இதற்கு பெரும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தாய்மொழியான பஞ்சாபி மொழி கட்டாயம் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகளுக்கு ரூபாய் 50,000 முதல் ரூபாய் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாய்மொழியை ஊக்குவிக்க பஞ்சாப் அரசு எடுத்த இந்த நடவடிக்கையை பெரும் பாராட்டுக்குரியது என கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதே நடவடிக்கையை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version